வேளச்சேரியை சேர்ந்த திரு. நைனா முகம்மது சார்பாக நேற்று முன்தினம் உணவளித்தபோது…

வேளச்சேரியை சேர்ந்த திரு. நைனா முகம்மது சார்பாக நேற்று முன்தினம் உணவளித்தபோது…
————–
தொடரும்
ஆதரவற்ற குழந்தைகள், முதியோருடன் உங்களின் பிறந்தநாள், விசேஷங்களை கொண்டாடுங்கள்.

Plz share to make it happen everyday!

Veettu Sappadu Social Service
Mohamed A. K. Jailani
Phone/Whatsapp 9500092255/ 7299427999

இளையபாரதிக்கு உதவி தேவை!

//Update: :தேவையான முழுதொகையும் உறுதியாகிவிட்டது. நன்றி//
இளையபாரதிக்கு 12 வயது. ஏழாவது படிக்கும் பையன். பிறக்கும் போது காது கேட்கும் திறன் நார்மலாகவே இருந்திருக்கிறது. சில வருடங்களில் அம்மை நோய் வந்த போது காது கேட்கும் திறன் குறைந்ததை பெற்றோர் கவனிக்கவில்லை. தந்தை கட்டிட கூலி வேலை செய்கிறார். சேத்துபட்டு(சென்னை சேட்பேட் அல்ல) அருகில் ஒரு கிராமம் சொந்த ஊராம். சென்னைக்கு வந்து ஓரிரு வருடங்களாகியிருக்கின்றன. தற்போது மருத்துவமணையில் பரிசோதித்ததில் இயல்பாய் கேட்கும் திறன் முற்றிலும் குறைந்து மெஷின் வைத்துக்கொள்ள அறிவுருத்தியிருக்கிறார்கள். ஆனால் நுங்கம்பாக்கத்தில் Hearing Aid Centre ல் விசாரித்ததில் ஆடியோகிராம் ரிசல்ட் படி இரண்டு காதுகளுக்குமே திறன் மிகக்குறைவாய் இருக்கிறது. இரண்டுக்கும் மெஷின் பொருத்தவேண்டும் என அறிவுருத்துகின்றனர். டாக்டர் ஒரு காதுக்கு மட்டும் என எழுதியிருக்கிறாரே என கேட்டதற்கு, அவர்கள் வழக்கமாய் ஒரு காதுக்கே பரிந்துரைக்கின்றனர். ஆனால் பிரச்சினை இரண்டு காதிலும்தான். என்கின்றனர். அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதிகம் பாதித்துள்ள ஒரு காதிற்கு முதலிலும் இன்னொரு காதுக்கு சில மாதங்கள் கழித்தும் வேண்டுமானால் பொருத்திக்கொள்ளலாம் என்கின்றனர். பையனின் தந்தையிடம் கேட்டதற்கு அவருக்கும் அப்படித்தான் (இரண்டு காதுகளுக்கும் பொருத்தவேண்டும் என) மருத்துவமணையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிக செலவாகும் அது தன்னால் முடியாது என்பதால் அவர் மெஷின் வாங்கும் முயற்சியெல்லாம் எடுக்கவில்லை, ஆனால் பள்ளிசெல்லும் பையனுக்கு தொடர்ந்து படிப்பு பாதிப்பதால் பல தொண்டு நிறுவனங்களில் உதவிக்கு விசாரித்து அலைந்து அவர்கள் மூலமாய் என்னை தொடர்புகொண்டனர்.

ஜனவரி 19ம் தேதி எடுத்த ஆடியோகிராம், அதையொட்டி ஜனவரி 31ம் தேதி டாக்டரின் பரிந்துரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Hearing Aid Center-ல் விசாரித்ததில் ஒரு காதுக்கு டிஜிட்டல் மெஷின் 22,000 ஆகும். இரண்டு காதுக்கும் என்றால் 44,000 ஆகும் என்கின்றனர். இன்னொரு பிராண்ட்டில் சற்று விலை குறைவாய் ஒரு காதுக்கு 19,000 ஆகும். இரண்டுக்கும் 38,000. பையனுக்கு பொருத்திப்பார்த்து எது சிறப்பாய் இருக்கிறது என பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்கின்றனர். (ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு மெஷின் வாங்கி உபயோகிக்கும் நண்பரின் அறிவுறுத்தலின் படி இந்த கம்பெனிக்கு சென்று விசாரித்தேன். விலை கூடுதல் குறைவு பற்றி வேறு ரெகமெண்டேசன் இருந்தாலும் சொல்லுங்கள் அவர்களிடமும் விசாரிக்கலாம்). அனலாக் மெஷினும் இருக்கிறது. அதன் விலை சுமார் 13-14 ஆயிரம், ஒரு காதுக்கு. ஆனால் அதில் வெளிப்புற சத்தத்தின் தொந்தரவு அதிகமிருக்கும் என்றனர். அதைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கமளிக்கவும்)

படிக்கும் சிறுவனின் வாழ்க்கையை, எதிர்காலத்தை மாற்றும் ஒரு விசயமாய் இருக்கும் இந்த உதவிக்கு முயற்சி எடுப்போம். என் பங்கு ரூபாய் 1000. பலர் சேர்ந்து சிறுசிறு தொகையாய் உதவி இதை செயல்படுத்துவோம். நம்மால் பெரித தொகையாய உதவ முடியாதே என தயங்காமல் 200 ரூபாய், 500 ரூபாய் என முடிந்ததை பங்களித்து உதவலாம். எவ்வளவு தொகை என்பது இரண்டாம்பட்சம். வேடிக்கை பார்க்காமல் முன்வந்து உதவும் மனப்பான்மைதான் முக்கியம். அப்படி பலர் இணையும்போது இன்னும் பல முயற்சிகளை தைரியமாய் முன்னெடுக்கும் பலம் கிடைக்கிறது.

இந்த உதவிக்கு முன்வந்த Mahendhran Murugan, Umar Farook, Abdul Hameed, Yakub M Sulaiman, Sakthivel Viru Jeya Balamurali மற்றும் அனைவருக்கும் நன்றி!

தொடர்புக்கு, Mohamed A. K. Jailani
#BeingHeroProject Team Veettu Sappadu Social Service
Phone / Whatsapp: 9500092255 / 7299427999
—–
தொடரும்!
Plz share and support to make this happen soon!

நடுக்குப்பம் உதவி – மூன்றாவது கட்டம்!

நடுக்குப்பம் ஏரியாவில் முந்தைய லிஸ்டில் வராமல் வாகனங்கள் சேதமான 15 குடும்பத்தினருக்கு இன்று மாலை சிறிய அளவில் நிவாரணப்பொருட்கள் வழங்கியபோது
———–+
தொடரும்
Team Veettu Sappadu Social Service
Mohamed A. K. Jailani
Saligramam, Chennai
Phone / Whatsapp 9500092255 / 7299427999

இளமாறன்- இலக்கியா இருவரின் நான்காவது பிறந்ததினத்தை முன்னிட்டு

திருமதி சாருலதா அவர்கள் தனது இரட்டைக்குழந்தைகளான இளமாறன்- இலக்கியா இருவரின் நான்காவது பிறந்ததினத்தை முன்னிட்டு (கடந்து பிப்ரவரி 8ம் தேதி) லிட்டில் ட்ராப்ஸ் முதியோர் இல்லத்திலிருக்கும் சுமார் 200 பேருக்கு உணவளிக்க முன்வந்தார். அவருக்கு நம் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் Anitha N, Senthil Siva, ஷேக் முக்தர் உட்பட பலரின் பங்களிப்புடன் மொத்தமாய் 450 பேருக்கு சைவ விருந்தளிக்கப்பட்டது.

Many More Happy to Returns to Ilamaran & Ilakkiya.

Thanks to Mrs. Charulatha & everyone who made it happen!
—–
தொடரும்!
Plz share to make this happen everyday!

Team வீட்டு சாப்பாடு Veettu Saappadu
Mohamed A. K. Jailani
Phone/Whatsapp 9500092255 / 7299427999
Saligramam, Chennai